விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிராப்புலியூர் கிராமத்தில் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் ஆலயமானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புணரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகாசி மாதம் இந்த ஆலயத்தில் அக்னி வசந்த பெருவிழா நடைபெற்றது. இதேபோல் இந்த ஆண்டும் அக்னி வசந்த பெருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தீ மிதித்தல் திருவிழாவானது நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.