மாநில அளவிலான சப் ஜூனியர் எறிபந்து போட்டி…
திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வளாகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான 16 வயது உட்பட்டோருக்கு சப் ஜூனியர் மாநில எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர், தென்காசி உள்ளிட்ட 32 மாவட்டங்களை சேர்ந்த 520 வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.இதில் தேர்வு செய்யப்படும் 12 வீரர்கள் மற்றும் 12 வீராங்கனைகள் வருகின்ற ஜூலை மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணியில் பங்கேற்க உள்ளனர்.
