திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே பூமலூரில் உள்ள புனித அந்தோனியார் திருத்தலத்தில்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுஇந்த புனித அந்தோனியார் தேவாலயத்தில்
கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.மேலும் வருகிற 14-ந்தேதி கூடடுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது. பின்னர் வருகிற 15-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி, காலை 10 மணிக்கு வேண்டுதல் தேர், காலை 11 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.வருடம் தோறும் நடைபெறும்
இந்த தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள்,மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தமிழகம், கேரளா,கர்நாடகா மாநிலத்திலஇருந்து ஏராளமான கிருஸ்தவர்கள்,இந்துக்கள்,இஸ்லாமியர்கள் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர்.