தஞ்சை டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி திறக்கப்படும் என்று முன் கூட்டியே அறிவித்ததையடுத்தும், பாசன ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரியதை அடுத்தும்குறுவை நெல் சாகுபடிக்காக தஞ்சை விவசாயிகள் நாற்று தயாரிக்கும் பணி மற்றும் நடவுப்பணிகளை துவங்கிவிட்டனர்.

மேட்டூர் அணையில் 112 அடி வரை நீர் இருப்பு உள்ளதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சூப்பராக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்ததையடுத்து, குறுவை சாகுபடியை முன்கூட்டியே துவக்க திட்டமிட்டு, ஆழ்குழாய் பாசன நீர் மூலம் விதை தெளித்து நாற்று பறித்து தொடர்ந்து நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்இன்னும் 3 வாரங்களில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் கிடைத்ததும் பயிர்கள் நன்கு வளர துவங்கிவிடும், அடுத்த பருவமழைக்கு முன் அறுவடை செய்துவிடுவோம் என்றும் மேட்டூர் அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், தற்போது தஞ்சை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சூப்பராக இருக்கும் நம்பிக்கை தெரிவித்தார்