திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாகவே பலத்த சூறைக்காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது இந்நிலையில் கொடைக்கானலில் பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மரங்கள் முறிந்து விபத்து ஏற்பட்டு வருகிறது …தற்போது

கொடைக்கானல் இந்திரா நகர் பகுதியில் அமைந்திருக்கும் அரசினர் ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியின் மேற்கூரைஅடித்த சூறை காற்றில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தது .

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி மேல் கூறை முற்றிலும் சேதம் அடைந்தது..
தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவிகள் யாரும் இல்லாத காரணத்தால் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மேலும் தற்போது கொடைக்கானலில் சூறைக்காற்றும் சாரல் மலையும் பொழிந்து வரும் காரணத்தினால் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் கவனத்துடன் கொடைக்கானல் வந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றனர்.