சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஒன்றிய பணியாளர் தேர்வாணத்தை கண்டித்து யுபிஎஸ்சி கேள்வித்தாள் நகல் கிழிக்கும் போராட்டம்
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது.இந்தத் தேர்வில் யுபிஎஸ் தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்? என கேட்கப்பட்ட கேள்வியில் பெரியார் ஈ.வெ.ராமசாமி
நாயக்கர் என சாதி பெயருடன் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சை ஆகி உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் எதிரே தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஒன்றிய பணியாளர் தேர்வாணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் யூபிஎஸ்சி கேள்வித்தாள் நகல் கிழிக்கும் போராட்டம் நடைபெற்றது.
