பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற மூன்று பேர் கைது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் போலீசார் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் விற்பனைக்காக 1கிலோ 200கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.விசாரணையில் திருச்சி காந்திநகர் சேர்ந்த முத்துராமன் (48), தூத்துக்குடி அல்லிக்குடி பகுதியை சேர்ந்த மணி(27), புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த ரவிகிருஷ்ணன் (24) ஆகிய மூன்று பேர் விற்பனைக்காக கஞ்சா எடுத்து வந்தனர் என்று தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் 3 பேரை கைது செய்து 1கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 3பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் கொண்டுவரப்பட்ட கஞ்சா விற்பனைக்கு யாரிடம் கொடுக்க சென்றனர் வேறு யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்,
