மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கல்லார் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்திமான

(பல் மருத்துவரான திவ்ய பிரியா) சம்பவ இடத்திலேயே பலி திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் நிகழ்ந்த சோகம்

மேட்டுப்பாளையம் போலீசார் விபத்துக் குறித்து விசாரணை.

மதுரை மாவட்டம் புதுக்கோட்டை நாகமலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி திவ்ய பிரியா வயது 28. இருவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. திவ்ய பிரியா அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி ஆவார் பல் மருத்துவராகவும் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கார்த்திக் ராஜா அவரது மனைவி திவ்யப்பிரியா மற்றும் அவரது உறவினர்கள் பரமேஸ்வரி வளர்மதி ஆகியோர் ஊட்டிக்கு காரில் புறப்பட்டு சுற்றுலா
சென்றனர்

ஊட்டியை சென்றடைந்து ம் அங்கு சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் மதுரைக்கு இன்று மாலை காரில் புறப்பட்டனர் பார்த்திபன் என்பவர் காரை ஓட்டினார்.

இந்த நிலையில் மாலை சுமார் ஐந்து 40 மணிக்கு
கார் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் கல்லார் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் பிரேக் பிடிக்கவில்லை என தெரிகிறது இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பாதையில் சாலையோரத்தில் இருந்த
திட்டில் மோதி கவிழ்ந்தது இதில் திவ்ய பிரியா பரமேஸ்வரி வயது 44 வளர்மதி வயது 48 ஆகியோர் படுகாயம் அடைந்தனர் உடனே அக்கம் பக்கம் இருந்து அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு திவ்ய பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரி வளர்மதி ஆகியோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ் அதிகமான் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர் விபத்தில் இறந்த திவ்ய பிரியாவின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.