சீர்காழி திருக்கருக்காவூர் பகுதியில் மயான கொட்டகைக்கு சுற்றுசுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பணிகள் தொடங்கியதால் அதனை தடுத்துநிறுத்திடவும், எழுத்துபூர்வமாக பணிகள் நடைபெறாது என உத்தரவாதம் அளிக்கவேண்டும் எனக்கோரி பெண்கள் உள்ளிட்டோர் கோட்டாட்சியல் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு சுற்றுசுவர் மற்றும் மயான கொட்டையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே நேரம் சுற்றுச்சுவர் அமைக்க மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சுடுகாட்டை அப்பகுதியிலிருந்து அப்புறபடுத்தவேண்டும் என்கின்றனர். இதனால் இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுசுவர் அமைக்கும் பணி தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் சாலைமறியல்,தர்ணா போராட்டங்களில் ஈடுப்பட்டதால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனிடேயே மீண்டும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளதால் ஆத்திரமடைந்த திருக்கருக்காவூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர்,மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்ளிட்டோர் கோட்டாட்சியல் அலுவலகத்தில் பணிகளை நிறுத்திட மனு அளிக்க திரண்டுவந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியல் சுரேஷ் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணிகள் நடத்தப்படும் எனவும் அதுவரை பணிகள் நடைபெறாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனை எழுத்துபூர்வமாக தரவேண்டும் என கோரிய மக்கள், பெண்கள் உள்ளிட்டோர் குழந்தைகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அலுவலக நேரம் கடந்தும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
