கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை புலி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சென்ட்ரல் டிவிஷன் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது இங்கு ரவி என்பவரது வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் காணவில்லை
இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுத்தை புலி ஒன்று வீட்டின் முன்பாக தூங்கிக் கொண்டிருந்த நாயை வேட்டையாடி இழுத்துச் செல்லும் காட்சிகள் பார்த்துள்ளார்
இதை தொடர்ந்து வனத்துறைநருக்கு தகவல் அளித்துள்ளார் வனத்துறையினர் இந்த பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள் தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
