உளுந்தூர்பேட்டை ஸ்ரீ புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான ஸ்ரீ புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கணபதி பூஜைகள் துவங்கி யாகசாலை பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இன்று காலை நடைபெற்ற யாகசாலை பூஜை வழிபாட்டுக்கு பின் யாத்திரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் வான வேடிக்கை மேள, தாளம் முழங்க புனித நீர் கோபுர கலசத்திற்கு கொண்டு சென்று ஊட்டப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ புத்து மாரியம்மன் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
