பொள்ளாச்சி அருகே உள்ள
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் இயங்கி வருகின்றன. இதில் சில கிரசர்களில் கனிம வளம் இருப்பு கிடங்கு வைக்க முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர்,வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கிரசர்களில் புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர்,வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்ததில், பனப்பட்டியில் ஒருகிரசரும்,அரசம்பாளையம் பகுதியில் 2 கிரசர்கள் என மொத்தம் 3 கிரசர்கள் கனிம இருப்பு கிடங்கு வைக்க முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3கிரஷர்களுக்கும் கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ் பாபு மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.