விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுவை மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த இரண்டு பேர் கைது -ஐந்து லட்சம் மதிப்புள்ள புதுவை மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் -போலீசார் விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது சந்தேகம் படியாக அதிவேகமாக சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது புதுவையைச் சேர்ந்த கமலநாதன் மற்றும் பாலாஜி,இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர் இதனால் சந்தேகம் அடைந்த மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனை செய்தபோது அதில் 40க்கும் மேற்பட்ட பெட்டிகளில் 5 லட்சம் மதிப்புள்ள புதுவை மது பாட்டில்களை சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது இந்த நிலையில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தவுடன் மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர் மேலும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் மதுராந்தகம் கலால் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.