மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம் இடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் புதிய கட்டிடம் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கட்டிடம் கட்ட போதுமான நிதி ஒதுக்கப்படததால் கடந்த 6 ஆண்டுகளாக கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.

இன் நிலையில் வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிடம் கட்ட ரூபாய் 5 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நிதிஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், நிவேதா. முருகன், ஆட்சியர் ஸ்ரீகாந்த், எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதேபோல் வைத்தீஸ்வரன் கோயில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.