விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில் பட்டு தென்னமாதேவி பகுதியில் புதிய கற்காலம், சங்ககாலம்,சோழர்காலத்தை சார்ந்த தொல்பொருள் எச்சங்கள் கண்டறிப்பட்ட நிலையில் அகழாய்வு நடத்தப்படுமன தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் இன்று தொல்லியல் துறை இனை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஐவர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவா உள்ளிட்டோர் அய்யன்கோவில்பட்டு பகுதியில் ஆய்வு செய்தனர். இரண்டு மாதங்களில் அகழாய்வு நடத்தப்படுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.