ஒன்றிய அரசைக் கண்டித்து தஞ்சையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தொழிலாளர் விரோத நான்கு சட்டங்களை திரும்ப பெற வேண்டும்,
விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் இதனை சட்டமாக்கிட வேண்டும் அரசு மற்றும் பொது துறைகளில் தினக்கூலி ஆட்கள் எடுக்க கூடாது
100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
