பழனி அருகே தனியார் கார் ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் திருட்டு- நள்ளிரவில் ஷோரூமில் நுழைந்து காரை திருடி சென்றுள்ளனர்- காரை திருடியவர் கைது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
பழனி- திண்டுக்கல் சாலையில் ஆயக்குடி அருகில் தனியருக்கு சொந்தமான மாருதி கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு ஷோருக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் தேடிச் சென்றுள்ளனர். மாருதி ஷோரூம் உள்ளே நுழைந்த திருடர்கள் கார் சாவியை தேடி எடுத்துக்கொண்டு, ஷோரூம் முன்பக்க கண்ணாடியை உடைத்து சிப்ட் காரை எடுத்துச் சென்றுள்ளனர். கண்ணாடி உடைக்கப்பட்டும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கார் திருடுபோனது தெரியவந்தது. மேலும் காரை திருட வந்தவர்கள் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க ஷோரூம் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் கார் எடுத்துச் செல்லப்பட்ட திண்டுக்கல் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் திருடர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் திருடு போன கார் ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளமரத்துப்பட்டி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. காரை திருடி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் வெள்ளமரத்துப்பட்டியை சார்ந்த சிவக்குமார் திருடியது தெரியவந்தது. மேலும் ஷோரூம் உள்ளே பணத்தை திருட சென்றபோது பணம் இல்லாததால் காரை எடுத்துச் சென்றதும் , மது போதையில் இருந்ததால் காரை தங்கள் ஊருக்கே ஓட்டிச் சென்று நிறுத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவரையும் பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.