நெல்லையில் திமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை.
நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சங்கர் வயது45. இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய பொருளாளராக இருக்கிறார்.
இவரது மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பதவியில் உள்ளார்.
இந்நிலையில் இவர்களது வீடு முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ளது. நேற்று இரவு குடும்பத்தினர் வழக்கம்போல் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வ சங்கர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்பொழுது 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் இவர்களது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றது.
உடனே அங்கே தீயில் பற்றி எரிந்து கொண்டிருந்த பொருட்களை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
தொடர்ந்து முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் காவல்துறையினர் செல்வ சங்கரின் வீட்டிற்கு வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் முன்னீர்பள்ளம் பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது செல்வ சங்கர் வீட்டு முன்பு அப்பகுதி பொதுமக்களும் குவிந்தனர்.
