தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28 வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக விசிறியபடி உண்ணாவிரதப் போராட்டம் துவக்கம் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான என்எல்சி தமிழ்நாடு பவர் லிமிடெட் அனல் மின் நிலையம் சார்பில் இரண்டு அலகுகள் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு சுமார் 1350 ஆண் பெண் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த ஊழியர்களுக்கு நெய்வேலி என்எல்சியில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது இதைத் தொடர்ந்து என் டி பி எல்லில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு என்எல்சி யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
ஆனால் என்எல்சி மற்றும் என் டி பி எல் நிர்வாகம் இதற்கு உடன்படாமல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி முதல் என்டிபிஎல்லில் பணிபுரியக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எட்டு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து உள்ளது இன்று 28 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த ஊழியர்கள் அனல் மின் நிலையம் முன்பு இன்று இரண்டாவது நாளாக 100 ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி உள்ளனர் உண்ணாவிரத பந்தலில் கோடை காலம் என்பதால் வெயிலின் கொடுமையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தேங்காய் தும்பை விரித்தும் கையில் விசிறி வைத்து விசிறியபடி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர் தங்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்
இந்நிலையில் கடந்த ஏழு நாட்களாக ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக என் டி பி எல் அனல் மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
எனவே என் டி பி எல் நிர்வாகம் என்எல்சி நிர்வாகம் தொழிலாளர் துறை ஆணையம் ஆகியவை உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்
கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்
