திருப்பூர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, திருப்பூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் ஒரு்நாள் வேலை நிறுத்தம். சிமெண்ட் ஜல்லி கற்களுக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் 30% முதல் 100% வரை உயர்ந்துள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அத்துறையினர் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 3 ஆயிரம் ரூபாயாக இருந்த 1 யூனிட் M. Sand 6 ஆயிரம் ரூபாயாகவும், P. Sand ஒரு யூனிட் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 7500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதே போல், 2500 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 யூனிட் ஜல்லி 6 ஆயிரம் ரூபாய்க்கும், 1 கிலோ இரும்பு கம்பி 65 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்ந்ததுடன், சிமெண்ட் விலையும் மூட்டை 280.ல் இருந்து 350 ரூபாயாக உயர்ந்துள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கோள்ளும் கட்டுமான பொறியாளர்களும், நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
கட்டுமான ஒப்பந்தம் சதுர அடிக்கு தற்போது 2400 ரூபாயாக இருப்பதை 2700 ரூபாயாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லிக்கட்டுகள் ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தி முறையான விலை நிர்ணயத்தை அரசு மேற்கொள்ள வேண்டும், கல்குவாரிகளை அரசுடைமையாக்கி அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் பொது மக்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்,
ஆற்று மணல் குவாரிகளை அரசு உடனடியாக திறக்க வேண்டும், என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சிமெண்ட் மூட்டை ஜல்லி கற்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பேட்டி;
மாநில போராட்ட குழு தலைவர் தில்லை ராஜன்.
