அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் 71 வது பிறந்தநாள் விழாவை அண்ணா திமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.எஸ்.எம்.ஆனந்தன் சார்பில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் வெள்ளி கொலுசுகளும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாலமுருகன் நகர் பகுதியில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்.
பல்லடம் பரமசிவம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர்.முத்து வெங்கடேஷ் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
