திருப்பூர்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டைய நாமம் பூசி மடிப்பிச்சை செய்தி போராட்டம்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது குறிப்பாக தேர்தல் வாக்குறுதி 313-ன் படி 6,750 குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் முத்தமிழ் ராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டை நாமம் பூசி மடிப் பிச்சை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் பெரிய அளவில் இருக்கும் என்றும் உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.