
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை எடுத்த காமராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் துர்கையன் ரேவதி தம்பதியினர் துர்கையன் தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார்.இவர்களது மகள் காவியா (15) தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.
இன்று உறவினர்களுடன் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
இதை அடுத்து அமராவதி ஆற்றில் உறவினர்களுடன் குளித்துக் கொண்டிருந்த காவியா திடீரென நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக உடன் இருந்த உறவினர்கள் காவியாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் காவியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத காவியாவின் உறவினர்கள் காவியாவின் உடலை தாராபுரத்தில் உள்ள இருவேறு தனியார் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.
தனியார் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் காவியாவை பரிசோதனை செய்துவிட்டு உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததை அடுத்து மீண்டும் அதன் பிறகு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மாணவி காவியா இருந்ததை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் பல்வேறு மருத்துவரிடம் காவியாவின் உடலை எடுத்துச் சென்று பரிசோதனை செய்தது சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
