கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில், அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட பனி பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றனர்.


கோவை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான கோடை வெயிலுக்கு மத்தியில், அவ்வப்போது பலத்த காற்றும், மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கோவை மாநகரில் உக்கடம், காந்திபுரம், வாளாங்குளம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனி பொழிவு இருந்தது.

இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகனங்களை இயக்கினர். மேலும் சில இடங்களில் சாலைகளே தெரியாத வண்ணம் அதிகாலையில் பனி பொழிவு காணப்பட்டது. கடுமையான வெயிலுக்கு மத்தியில் இருந்த பனி பொழிவை சிலர் ரசித்துச் சென்றனர்