திருவண்ணாமலையில் இந்திய ராணுவ வீரர்கள் வளத்தோடும், நலத்தோடும், பலத்தோடும் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற நடைபெற்ற சிறப்பு மகா அஸ்திரயாகம் .11 யாக குண்டங்கள் அமைத்து பூஜை நடைபெற்றது

காஷ்மீர் சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்து சில தினங்களுக்கு முன்பு சுட்டு படுகொலை செய்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானியர்களை தாக்கும் விதமாக இந்திய அனுபவம் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் உதவியோடு இந்திய ராணுவம் தாக்கியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு கிழக்கு பகுதியில் உள்ள ஐயங்குளம் எதிரே அமைந்துள்ள பழமை வாய்ந்த அருணகிரிநாதர் திருக்கோவிலில் இன்று இந்திய ராணுவ வீரர்களுக்காகவும் இந்திய நாட்டு மக்களுக்காகவும் அஸ்திர ஜபம் விமர்சையாக நடைபெற்றது.
இந்திய நாட்டு மக்கள் வளமோடும் நலமோடு வாழவும், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் நல்ல மன தைரியத்தோடும், வளத்தோடும், பலத்தோடும் தங்கள் கடமைகளை செய்ய வேண்டியும் இன்று திருக்கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத பண்டிதர்கள் ஓதுவார்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து 11 யாக குண்டங்கள் அமைத்து பல்வேறு வகையான மூலிகை பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா யாகம் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் பல்வேறு ஜெபங்களை கூற, ஓதுவார்கள் திருமுறைகளைப் பாட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் பூர்ணாஹுதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து யாக குண்டத்தில் இருந்த புனித நீர் திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலவர் அருணகிரிநாதருக்கு உச்சிக்கால வேளையில் புதிது நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு யாகத்தில் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.