உலகிலேயே முதன்முறையாக சைவத் திருமுறைகளை நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி.

201 நாட்டிய மாணவிகள் பங்குபெற்று நால்வரின் சைவத்திருமுறைகளை பரதநாட்டிய வடிவில் 20 நிமிடங்கள் நிகழ்த்தி சாதனை.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் 4-ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் சென்னை ஸ்ரீ.சங்கர நாட்டிய வித்யாலயா சார்பில் 201 மாணவிகள் பங்கேற்று சைவ, சமய, துறவர்கள் நால்வரின் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருசுந்தரர், மாணிக்கவாசகர் ) சைவதிருமுறைகளின் கருத்தாக்கத்தை பரத நாட்டிய அசைவுகள் மூலம் 20 நிமிடங்கள் வெளிப்படுத்தி செம்மொழி புக் ஆக் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.

உலகிலேயே முதன்முறையாக சைவ திருமுறைகளை நாட்டிய அசைவுகள் மூலம் வெளிப்படுத்துவது இதுவே முதன் முறையாக கூறப்படுகிறது. சென்னை கொரட்டூரில் உள்ள ஸ்ரீ.சங்கர நாட்டிய வித்யாலயாவின் சார்பாக நாட்டிய திலகம் சங்கீதாசிவகுமார் தலைமையில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக சென்னை கோவை வேலூர் கிருஷ்ணகிரி தூத்துக்குடி பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாட்டிய பள்ளிகளை ஒருங்கிணைத்து 201 பரத நாட்டிய மாணவிகள் 20 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

நமது பாரம்பரிய வாழ்க்கை முறையை உலகுக்கு அடையாளப்படுத்தும் வகையில்
திருநாவுக்கரசர் பாடிய சொற்றுணை வேதியன் சோதிவாணன் என்ற பாடலுக்கு 201 மாணவிகள் ஒரே நேரத்தில் நாட்டிய அசைவுகள் மூலம் 20 நிமிடம் பரதநாட்டிய நடனமாடியபடி வெளிப்படுத்தினர்.

அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 201 மாணவிகள் ஒரே நேரத்தில் பல்வேறு வரத அசைவுகளைக் கொண்டு நடத்திய நடனத்தை 20 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடியதை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

தொடர்ந்து செம்மொழி புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து சென்னை ஸ்ரீ சங்கர நாட்டிய வித்யாலயா சார்பில் உலக சாதனை முயற்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.