சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சகோபுரம் உற்சவம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருநிலைநாயகி உடைனாகிய பிரமபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.இக்கோயிலின் சித்திரை பிரமோற்சவம் கடந்த 1 ம் தேதி கொடியேற்றத்துடள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் 5 ம் நாள் திருவிழாவான தெருவடைச்சான் எனப்படும் சகோபுர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சகோபுரத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். அதனையடுத்து பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர். சகோபுரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்