குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவின் போது 17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவில் கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் 17.என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடினர்.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் 21. மற்றும் அவரது நண்பர்களான லோகேஸ்வரன் 19, முஸ்தபா 19, ராம்குமார் 21 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மோகன் 18 என்ற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. குளித்தலை நகரப் பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதே இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
