நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய காட்டு யானை – ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை பகுதியில் ஏற்கனவே தொடர்ச்சியாக வாகனங்களை சேதப்படுத்தி வந்த காட்டிய அணை இன்று காலை வீடு மற்றும் கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தி இருக்கிறது. காட்டு யானை தாக்குதலின் போது அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருக்கிறது. காட்டு யானையிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.