தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மதுராந்தகத்தில் நடைபெறும் 42 வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநில மாநாட்டிற்காக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைத்து பேருந்து, வேன் மற்றும் கார் என50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்க திரளாக புறப்பட்டு சென்றனர். இதனால் வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.