இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அரசு அதிகாரிகள் என கூறி பட்டா மாற்றுவதற்கு ரூபாய் ஒரு லட்சம் வாங்கி ஏமாற்றியதாக தேனி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நகர தலைவர் மீது புகாரின் அடிப்படையில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட எரணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் (34) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு (29.08.2024) அன்று உத்தமபாளையம் நகரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதிக் கொண்டிருந்த பெரியசாமி என்பவரை அணுகி பட்டா மாறுதல் சம்பந்தமாக விசாரித்துள்ளார்.
அப்பொழுது பெரியசாமி தன்னை துணை தாசில்தார் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு உத்தமபாளையம் மெயின் பஜார் உள்ள போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த ஒரு அலுவலகத்திற்கு கூட்டி சென்று அங்கு இருந்தவரை இவர் தாசில்தார் என்று அறிமுகப்படுத்தி பட்டா மாற்றம் செய்து தருவார் என்று கூறியதாகவும்.
சந்திரபோஸ் பட்டா மாறுதலில் சிக்கல் இருக்கு என்று கூறி தாசில்தார் என்ற கூறிய நபரிடம் சந்திரபோஸ் 5 தவணைகளாக ரூபாய் 1,07,000 வழங்கியதாகவும் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் பட்டா மாறுதல் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் சந்திரபோஸ் குடும்பத்தின் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் சந்திரபோஸ் அவர்களிடம் நீங்கள் பட்டா மாறுதல் செய்து தர வேண்டாம் என்றும் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
ஆனால் தாசில்தார் என்று கூறிய நபர் பணம் தர முடியாது என்றும் மேலும் தனது பாதுகாப்பு போலீசாரை வைத்து மிரட்டியதாக கூறி, தன்னிடம் பணம் பெற்றவர்களை பற்றி சந்திரபோஸ் விசாரித்த பொழுது போலீஸ் பாதுகாப்புடன் இருந்து தாசில்தார் என்று கூறிய நபர் தேனி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வா என்ற செல்வ விக்னேஷ் (27) உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்றும் இவர் போலீஸ் பாதுகாப்பு பெற்றவர் என்றும் மற்றும் துணை தாசில்தார் என கூறியவர் உத்தமபாளையம் இந்து முன்னணி நகர தலைவர் பெரியசாமி தாக்கரே (42)என்றும் தெரியவந்தது.
அரசு அதிகாரிகள் போல் நடித்து தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றியது அறிந்த சந்திரபோஸ் இது சம்பந்தமாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்த தொடர்ந்து உத்தமபாளையம் போலீசார் தேனி இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வா மற்றும் உத்தமபாளையம் இந்து முன்னணி நகர தலைவர் பெரியசாமி தாக்கரே ஆகியோர் மீது IPC – 419, 420, 506(1) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.