திருவள்ளூர் அடுத்த பூண்டி,
அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேகர்(57).

நேற்று மாலை பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற அவர்,படகில் இருந்து வலை விடும் சமயத்தில் திடீரென சூறாவளி காற்று சுழற்றி அடித்த போது,

படகுடன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் திருவள்ளூர்
தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், தலைமையிலான குழு பூண்டி ஏரியில் மீட்பு படகில் சென்று சேகரை தேடினர்.ஆனால், இரவு நேரம் என்பதால் மீட்பு பணியை நிறுத்தி விட்டு மீண்டும் காலையில் தேடிய போது சேகர் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் இச்சம்பவத்தைக் குறித்து விரைந்து வந்த பென்னலூர்பேட்டை காவல் துறையினர் சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் பிடிக்க சென்ற மீனவர் திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்றால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.