கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தூய்மை பணியாளர் பணியை புறக்கணித்து போராட்டம்.

மாவட்ட ஆட்சியர் அறிவித்த தின கூலி வழங்கிட வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட்டு மாநகராட்சி பணியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
ESI, PF போன்ற தொழிலாளர் பணி பலன்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது..
