நெல்லை வண்ணாரப்பேட்டையில் பெண் உடை அணிந்த இளைஞர் ஏடிஎம் உடைத்ததால் பரபரப்பு.
காவல்துறையினர் பிடித்து விசாரணை

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆசனூர் பகுதியைச் சேர்ந்தவர் பவுல் ஆனந்த்50.

மனநலம் பாதிக்கப்பட்ட இவர் இன்று காலை நெல்லை வண்ணாரப்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலம் அருகே பெண்கள் உடை அணிந்து சாலையில் சுற்றித்திரிந்தார்.

அப்போது அவ்வழியே வந்த சில கார்களின் கண்ணாடிகளை பவுல் ஆனந்த் உடைத்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள பெண்களையும் அவர் பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பவுல் ஆனந்த், வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை உள்ளே வைத்து வெளியில் இருந்த சட்டரை மூடி சிறை பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎம் மையத்தின் சட்டரை திறந்து பார்த்தபோது பெண் உடையுடன் இருந்த பவுல் ஆனந்தை மீட்டனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் முழுமையான தகவலை பெற முடியாத காரணத்தினால் நெல்லை பகுதியில் உள்ள காப்பகத்தில் பவுல் ஆனந்தை ஒப்படைத்தனர்.
இதனால் வண்ணாரப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது