திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓடும் லாரியில் டாஸ்மார்க் மது பாட்டில்களை திருடிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் உள்ள மதுபான குடோனில் இருந்து டாஸ்மார்க் மது பாட்டில்களை லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் குடோனில் இறக்குவதற்காக சரக்கு லாரி ஒன்று வந்துள்ளது. லாரியை
தொட்டியம் மேய்கல் நாயக்கம்பட்டியை சேர்ந்த டிரைவர் கனகராஜ் (48) ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி – நாமக்கல் ரோட்டில் லாரியை ஆம்னி வேனில் பின் தொடர்ந்து வந்த ஐந்து பேர் கும்பலில் ஒருவர் டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லோடு லாரி மீது ஏறியுள்ளார்.
பின்னர் லாரியில் இருந்து ஏழு பெட்டிகளை
அந்த நபர் இறக்கியுள்ளார். லாரியை பின்தொடர்ந்து
வந்த அவரது சகாக்கள் மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை சேகரித்தவாறு வந்துள்ளனர்.முசிறி அரசு மருத்துவமனை அருகே வந்தபோது லாரி டிரைவர் கனகராஜ் டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது லாரியின் பின்பக்கம் இருந்து இறங்கிய ஒருவர் ஓடி சென்று ஆம்னி வேனில் ஏறியுள்ளார்.
இதனைக் கண்ட லாரி டிரைவர் கனகராஜ் லாரியில் ஏறி பார்த்த போது மது பாட்டில்கள் 7 பெட்டிகள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்த டிரைவர் கனகராஜ் உடனடியாக முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் ஆம்னி வேன் குறித்த தகவல்களை துறையூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.
இதையடுத்து துறையூர் ரவுண்டானா அருகே சரக்கு பாட்டில் திருடிய கும்பல் பயணித்து வந்த ஆம்னி வேனை துறையூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து வேனில் இருந்து நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் மதுரை கெசவம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டார். ஆம்னி வேன்,திருடப்பட்ட டாஸ்மார்க் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட ரமேஷிடம் தப்பி ஓடியவர்களின் விபரம் குறித்து முசிறி போலீசார் விசாரணை மேற்
கொண்டுள்ளனர். ஓடும் லாரியில் டாஸ்மார்க் மது பாட்டில்களை
திருடிய சம்பவம் அப்படிதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.