திண்டிவனம் அருகே சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவரை இரண்டு கிலோமீட்டர் தூரம் தோப்பு வழியாக கயிற்று கட்டிலில் சுமந்து வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் தங்களது சொந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இவர்கள் சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக போராடி வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் மேட்டு காலனியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் அப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் அவரது உறவினர்கள் சிலர் நடராஜனை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோப்பு வழியாக கயிற்றுக் கட்டிலில் கட்டி தூக்கி சென்று உள்ளனர்
இந்த நிலையில் இது குறித்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் நடராஜன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை அழைத்துச் சென்றனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது மேலும் உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்