கட்டுமான பொருட்கள் விலை உயர்வை குறைக்க கோரி மே 12 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக திருப்பூர் சிவில் இன் ஜினியர்ஸ் அசோசியேசன் அறிவித்து உள்ளது.
திருப்பூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் குமார் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக விலை ஏறும் கட்டுமான பொருள் விலை உயர்வை கண்டித்து மே 12ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது எனவும், மாவட் ஆட்ட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து பேச மாநில போராட்ட குழு தலைவர் தில்லை ராஜன், கட்டுமான பொருட்கள் தொடர்ச்சியான விலையுயர்வால் கட்டுமான தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மணல் கற்கள் விலை இரு மடங்காக உயர்ந்து விட்ட நிலையில் கட்டுமான நிறுவனங்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதாகவும், மாற்று மணல் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை பாதியாக குறைக்க வேண்டும்.
கட்டுமான பொருட்களை அத்தியாவசிய விலை பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி மே 12 ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் எனவும், அதற்கு அரசு செவிசாய்க்காக விட்டால் மே 19ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.