நடிகர் அஜீத் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் உள்ள பேக்கரியில் 7 கிலோ எடையும் ரேஸ் கார் செய்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது – ஊழியர்களுடன் கேக் வெட்டி அஜீத் பிறந்த நாளை கொண்டாடிய உரிமையாளர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் தனியார் (தனியார்) ஸ்வீட்ஸ் & பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்த பேக்கரியில் நடிகர் அஜீத்தின் பிறந்த நாளை முன்னிட்டும், அவர் பார்முலா கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காகவும், பத்ம பூஷன் விருது பெற்றதற்காகவும், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும் அவரது பெருமையை விளக்கும் வகையில் சுமார் 7 கிலோ எடையில் பந்தய கார் வடிவில் கேக் செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது. அப்போது, கடை ஊழியர்களுடன் அக்கடையின் உரிமையாளர் சிவசுப்ரமணியன் கேக் வெட்டி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொண்டாடினர்.
