நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருக யானை சாணம்(லத்தி) குடிநீர் தொட்டியில் கலப்பு. சோலூர்மட்டம்
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட கீழ் கோத்தகிரி அருகே தூனேரி மேலூர் கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகே நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் கிராம மக்கள் தண்ணீர் எடுக்க சென்றபோது தொட்டியின் மூடியில் போடபட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர். இதனை தொடர்ந்து தொட்டியின் உள்ளே பார்த்த கிராம மக்கள் அதில் யானை சாணம் கலந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
இது குறித்து உடனடியாக சோலூர்மட்டம் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.காவல்துறையிர் விரைந்து வந்து அதில் கலந்துள்ள சாணம் மற்றும் குடிநீரை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.