பர்கூர் முதலாவது கொண்டை ஊசி வளைவில் டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்து.


22 மணி நேரத்திற்கு மேலாக சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது.லாரி மீட்கப்பட்டதை அடுத்து தமிழகம்- கர்நாடக இடையே பெரிய கனரக போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதை முதலாவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் நடுவே கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய் நார் பிரிக்ஸ் ஏற்றி வந்த டாரஸ் லாரி நேற்று மதியம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுனர் கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்த்தபினார்.
டாரஸ் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்தால் 16 சக்ரத்திற்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக கர்நாடக தமிழகம் இடையே கனரக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பேருந்து, 12 சக்கரங்களுக்கு உட்பட்ட லாரிகள், கார் பைக் மற்றும் சிரியா ரக சரக்கு வாகனங்கள் சென்று வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தான் ஆட்கள் வரலைக்கப்பட்டு லாரியில் இருந்த சரக்குகள் வேறொரு லாரிக்கு மாற்றப்பட்டது, தொடர்ந்து இரவு நேரம் என்பதாலும் கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து கிடப்பதாலும் லாரியை மீட்கவில்லை.
தொடர்ந்து இன்று கலை சுமார் 10 மணி அளவில் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்குபணி தொடங்கியது.
தொடர்ந்து சிறிது நேரத்தில் லாரி மீட்கப்பட்டு ஓரமாக நிறுத்தப்பட்டது, இதை எடுத்து வரட்டுப்பள்ளம் வன சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய கனரக வாகனங்கள் மீண்டும் செல்ல தொடங்கின.
சுமார் 22 மணி நேரமாக சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த லாரி மீட்கப்பட்டதை அடுத்து தமிழகம் கர்நாடக இடையே மீண்டும் பெரிய கனரக வாகனங்கள் செல்ல தொடங்கின.