
கோவை
கோவையில் மழை வர வேண்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் – தொண்டாமுத்தூர் வட்ட விவசாயிகள் 1008 குட தீர்த்தம் எடுத்து சிறப்பு யாகம்.
கோடை காலத்தில் விவசாயிகளை பாதுகாக்க, மழை வேண்டி கடந்த 35 ஆண்டுகளாக தொண்டாமுத்தூர் வட்ட விவசாயிகள் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் 1008 தீர்த்த குடம் எடுத்து வழிபாடு செய்கின்றனர்.
இந்த ஆண்டும் அதிக பெண் விவசாயிகள் கலந்து கொண்டு 1008 தீர்த்த குடம் எடுத்தும், சிறப்பு யாகம் நடத்தி மழை வேண்டி வழிபட்டனர்.