கடலூர்…..
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி யில் பதட்டம்; போலீஸ் குவிப்பு.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ வெளியானது.
இரு தரப்பு மோதல் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
தாக்கப்பட்ட முருகவேலுப் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் கடலூர்- விருத்தாசலம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.