நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் கண்ணீர் மல்க தர்ணா போலீசார் சமாதானம்

நெல்லை நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் முத்துராணி.
கணவரை இழந்த இவர் நெல்லை சுத்தமல்லி பகுதியில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
அங்கே பணிபுரியும் பொறுப்பில் உள்ள ஆசிரியர் நிஷா என்பவர், அங்கன்வாடி மையத்திற்கு வரக்கூடிய உணவுப் பொருட்களை தனது வீட்டில் வைத்து உபயோகப்படுத்தி உள்ளார்.
இதை முத்துராணி உயரதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் நிஷா வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து 2024 டிசம்பரில் சுத்தமல்லி பகுதியில் செயல்படும் அங்கன்வாடி அலுவலகத்தை அதிகாரிகள் வந்து அடைக்க வந்தார்கள்.
அப்பொழுது அங்கிருந்த மக்கள் அங்கன்வாடி பூட்டப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்களை தூண்டி விட்டதாக கூறி முத்து ராணியை, அங்கன்வாடி உயர் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் தற்காலிக பணிநீக்கம் காலம் முடிந்து 5 மாதம் கழித்து இன்று முத்துராணி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் அங்கன்வாடி திட்ட அலுவலகத்திற்கு வந்து தான் வேலை செய்த அங்கன்வாடியின் சாவியை பெற்றுக் கொள்வதற்காக வந்துள்ளார்.
திட்ட அலுவலர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் முத்துராணியிடம் சாவியை வழங்கவில்லை.
இதனால் அவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து கண்ணீருடன் கலெக்டரை சந்திக்க வேண்டும் நீதி வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.