332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

கடந்த 2020ஆம் ஆண்டு மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் த வாகன தணிக்கை செய்து வந்த நிலையில் ச அவனியாபுரம் செல்லும் வழியில் கண்டெய்னர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 332 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

கஞ்சா கடத்திய மதுரை மாவட்டம் கட்டதேவன்பட்டியைச் மலைச்சாமி மற்றும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை எக்கட்டாம் பாளையத்தைச் சேர்ந்த சண்முகபிரபு ஆகியோரை கைது செய்தனர்.
இவ் வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று சாட்சிகள் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு ஹரிஹர குமார் 332 கிலோ கஞ்சாவை கடத்திய மலைச்சாமி மற்றும் சண்முகபிரபு ஆகியோருக்கு தலா 20 வருடங்கள் கடும் காவல் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்கள்.