சிவகங்கை அருகே சாமியார் பட்டியில் திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பிரவீன் குமாரை நேற்று மதியம் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்ததுகொலை தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தாலும் தூண்டுதலாக இருந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்றும் சாமியார்பட்டி விலக்கு ரோட்டில் மானாமதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல். போராட்டத்தில் உறவினர்கள் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பிரவீன் குமாரை நேற்று மதியம் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில் மூன்று குற்றவாளிகளையும் காவல்துறை நேற்று இரவு கைது செய்தது அதனைத் தொடர்ந்து இன்றும் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கிராமப் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் மானாமதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதும் கொலை சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.