புள்ளிமானை துரத்திய தெரு நாய்கள் ரெடிமேட் துணிக்கடையில் புகுந்து ட்ரையல் ரூமில் தஞ்சம் அடைந்தது

டிரையல் ரூமில் மூன்று பக்கமும் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் தன் உருவம் பிரதிபலித்தபோது மீண்டும் கூட்டத்துடன் வந்து விட்டதாக எண்ணி மான் தைரியமாக அதே இடத்தில் நின்று கொண்டது

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்கு விட்டனர்

இந்த சம்பவம் வயநாடு சுல்தான் பத்தேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது

கேரள மாநிலம் வயநாடு சுல்தான் பத்தேரில் புள்ளிமான் ஒன்றை இரண்டு தெரு நாய்கள் துரத்தியுள்ளது நாய்களிடமிருந்து நீண்ட தூரம் ஓடி தப்பிய மான் நகர் பகுதியில் இருந்த ரெடிமேடு துணி கடைக்குள் புகுந்துள்ளது கடைக்குள் சென்ற மான் நேராக ட்ரையல் ரூமில் சென்றுள்ளது மூன்று பக்கம் கண்ணாடி வைக்கப்பட்டிருந்ததால் தான் மீண்டும் மான் கூட்டத்திற்குள் வந்து விட்டதாக எண்ணி நீண்ட நேரம் அங்கேயே நின்று விட்டது

கடைக்காரர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் அவர்கள் வலையுடன் வந்து புள்ளி மானை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.