காட்பாடி இரயில் நிலையத்தில் இரயிலில் கடத்தி வந்த கேட்பாரற்றுக் கிடந்த 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்.

காட்பாடி இரயில் நிலையத்தில் காட்பாடி இரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையிலான போலீசார் மற்றும் சேலம் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் கூட்டாக இணைந்து பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் இரயிலில் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது ஜெனரல் கம்பார்ட்மெண்டில் உள்ள பாத்ரூம் அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை மேற்கொண்டனர் அந்தப் பையில் 5.5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
மேலும் இந்த கஞ்சாவை யார் எங்கிருந்து கடத்தி வந்தனர் எங்கு கடத்திச் செல்ல இருந்தனர் என்பது குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.