தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் மறைந்த போப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து அஞ்சலி

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் உடல்நல குறைவால் உயிரிழந்தார் அவர் இறுதிச் சடங்கு இன்று வத்திக்கானில் நடைபெறுகிறது உலகம் முழுவதும் இவருக்கு பல்வேறு விதமாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தூத்தூர் மண்டலம் இணைய மண்டலம் ஆகிய இரண்டு மண்டலங்களைச் சேர்ந்த 13 கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 900 விசைப்படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்டு மரங்களில் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லாமல் மறைந்த போப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலை நிறுத்தம் செய்தனர்

இதை ஒட்டி தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் மறைந்த போப் ஆண்டவரின் உருவப்படத்திற்கு மெழுகுதிரி ஏந்தி கொழுத்திஇங்குள்ள மீன் தொழிலாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர.