கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் பகல்கம் என்ற பிரபல சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடியிருந்த இடத்தில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததை அடுத்து இந்தியா முழுக்க பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும் பல்வேறு இடங்களில் சோதனைகள் பலப்படுத்தி வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லது பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது… கொடைக்கானலில் முக்கியமாக வட்டக்காணல் என்ற பகுதியில்தான் அதிக அளவிலான வெளிநாட்டவர்கள் விரும்பி வருவார்கள் குறிப்பாக இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருடத்திற்கு மூன்று மாதங்கள் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் தங்கி இருப்பார்கள்.ஆனால் இஸ்ரேல் நாட்டு போருக்கு பிறகு இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்திருக்கிறது மேலும் வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கிருக்கக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு வட்டக்கானல் பகுதியில் தங்குவது வழக்கம் வெளிநாட்டவர்கள் அதிகமாக வருவதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டக்கானல் முக்கிய பகுதியாக இருக்கிறது மேலும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் வட்டக் காணலுக்கு அதிகமாக வருவார்கள் இந்நிலையில் அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தி வரக்கூடிய நிலையில் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இன்று நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கியுடன் வட்டக் கானலில் ரோந்து மேற்கொண்டு வட்ட காணலிலிருந்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளை கவி கிராமம் வழியாக பெரியகுளம் சென்றதாக கூறப்படுகிறது வட்டக்கானலில் இருந்து பெரியகுளம் செல்லக்கூடிய இந்த பாதை முழுவதும் வனப்பகுதியில் ஆன பாதை என்பதால் இதில் ரோந்து மேற்கொண்டதாக கூறப்படுகிறது.