சர்வதேச அளவில் இந்தோ நேபால் சிலம்பு போட்டியில் தமிழக வீரர்கள் ஒட்டுமொத்த தங்கபதக்கத்தை பெற்று அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மாம்பாக்கம் முறப்பாக்கம் ஆகிய பகுதி சேர்ந்த 12 சிலம்பு பயிற்சி மாணவர்கள் சர்வதேச ஆசான் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கலை கூடம் . சார்பில் சர்வதேச அளவில் இந்தோ நேபால் சிலம்பு போட்டி கடந்த 18. 19, 20 ஆகிய மூன்று நாட்கள் போட்டிகள் நேபாலில் நடைபெற்றது
இதில் இந்தியாவில் தென் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா உபி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்கள் கலந்து கொண்டன இதில் நடத்தப்பட்ட சிலம்பு போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த 12 வீரர்களும் சிலம்பு போட்டியில் ஒட்டுமொத்த தங்க பதக்கத்தையும் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கங்களை அள்ளி வந்தனர்
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் அசித்தினர் இவர்களுக்கு மதுராந்தகம் மாம்பாக்கம் பகுதியில்வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு பெற்றோர்கள் சார்பிலும் கிராமத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது மேளதாளங்கள் முழங்க இவர்களை வரவேற்று மாலை போட்டு சால்வை அணிவித்து முத்தமிட்டு இவர்களை பொதுமக்களும் பெற்றோர்களும் வரவேற்றனர்